ஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு !! 1

ஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாயின் அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மற்ற கேப்டன்களை போன்று பந்துவீச்சை தேர்வு செய்யாமல் தில்லாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிங்கிய ஹைதிராபாத் அணிக்கு ஜானி பாரிஸ்டோவும், டேவிட் வார்னரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் பாரிஸ்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.

டேவிட் வார்னர் போன்ற அதிரடி ஆட்டக்காரர் நீண்ட நேரம் களத்தில் நின்றிருந்தாலும் ஹைதிராபாத் அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. மற்றொரு வீரரான மணிஷ் பாண்டே சீரான இடைவேளையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த போதிலும் முதல் 10 ஓவருக்கு ஹைதராபாத் அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு !! 3

அடித்து விளையாட திணறிய டேவிட் வார்னர் 36 ரன்களிலும், மணிஷ் பாண்டே 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். பின்வரிசையில் வந்த சஹா 30 ரன்களும், நபி 11 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *