பஞ்சாப் அணியில் கனவில் தீ வைத்த திவேட்டியா; வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் !! 1

பஞ்சாப் அணியில் கனவில் தீ வைத்த திவேட்டியா; வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மாயன்க் அகர்வால் 106 ரன்களும், கே.எல் ராகுல் 69 ரன்களும் எடுத்து கொடுத்து மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.பின்வரிசையில் வந்த வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் கனவில் தீ வைத்த திவேட்டியா; வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் !! 2

இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய பட்லர் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி எங்களுக்கும் அதிரடியாக விளையாட தெரியும் என்பது போல பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து பவர்ப்ளே முடிவதற்குள் 69 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த கூட்டணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கும் போது ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.

பஞ்சாப் அணியில் கனவில் தீ வைத்த திவேட்டியா; வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் !! 3

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்த பிறகும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனும் 42 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்திருந்த போது தேவை இல்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார். சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்ததது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், போட்டியில் மிகப்பெரும் ட்வீஸ்டாக ராகுல் திவேட்டிய பஞ்சாப் வீரர் ஷெல்டன் கார்டல் வீசிய ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எதிர்முனையில் ஜோஃப்ரா ஆர்ச்சரும் 3 பந்துகளில் 13 ரன்கள் குவித்து மிரட்டினார். இதன் மூலம் 19.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணியில் கனவில் தீ வைத்த திவேட்டியா; வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் !! 4

பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *