சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் பரம எதிரிகளான மும்பை – சென்னை இடையேயான இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி உறுதி செய்யும், அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான கதவு சென்னை அணிக்கு மொத்தமாக அடைக்கப்படும்.

அதிரடி வீரருக்கு இடம் கிடைக்குமா..? சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் மும்பை அணி இது தான் !! 2

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் துவக்க வீரரான குயின்டன் டி காக் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது அந்த அணிக்கு சிறந்த பலமாக கருதப்படுகிறது. மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை இழுத்துச் செல்ல ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என பேட்டிங் பட்டாளமே உள்ளது. எப்படியும் 160 ரன்களை தாண்டி விடும்.

பந்து வீச்சில் அந்த அணிக்கு பும்ரா, ராகுல் சாஹர் மிகப்பெரிய பலம். பும்ராவுக்கு இணையாக டிரென்ட் போல்ட் பந்து வீசி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

அதிரடி வீரருக்கு இடம் கிடைக்குமா..? சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் மும்பை அணி இது தான் !! 3

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியையும் எதிர்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, குவிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, நாதன் கூட்டர் நைல், ராகுல் சாஹர், டிரன்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *