பாண்டியா, பொலார்டு இல்லை; இந்த மும்பை வீரருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்; நியூசிலாந்து வீரர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மாவை, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் பெர்குசான் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா, சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களிலும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

பாண்டியா, பொலார்டு இல்லை; இந்த மும்பை வீரருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்; நியூசிலாந்து வீரர் சொல்கிறார் !! 2

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் தொடரிலும் மாஸ் காட்டி வரும் ரோஹித் சர்மாவுக்கும் இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர் படையே உண்டு.

இந்தநிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் பெர்குசன், ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பாண்டியா, பொலார்டு இல்லை; இந்த மும்பை வீரருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்; நியூசிலாந்து வீரர் சொல்கிறார் !! 3

இது குறித்து பெர்குசான் கூறியதாவது;

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு பந்துவீசுவது தான் மிகவும் கடினம். ரோஹித் சர்மாவை துவக்கதிலேயே அவுட்டாக்கவிட்டால் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது மிகவும் சவாலாக மாறிவிடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ரோஹித் சர்மாவின் மிகப்பெரும் ரசிகன்” என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் பெர்குசன், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்ற நிலையிலும் அந்த தொடரில் 21 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *