பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி; புதிய பிரச்சனையில் வீரர்கள் !! 1

பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி; புதிய பிரச்சனையில் வீரர்கள்

ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடரானது, செப்டம்பர் மாதம் அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டும் என பி.சி.சி.ஐ., கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி; புதிய பிரச்சனையில் வீரர்கள் !! 2

ஐ.பி.எல் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதில் நாளுக்கு நாள் சிக்கல்களும், பிரச்சனைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடுத்த வாரம் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளனர். இதனால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். இதில் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்குக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி; புதிய பிரச்சனையில் வீரர்கள் !! 3

தற்போது சிகிச்சையில் உள்ள அவர் இருவாரங்களுக்கு பிறகு மீண்டும் இரு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதில் நெகட்டிவ் என்றால் அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அனுமதிக்கப்படுவார். அங்கு சென்ற பிறகும் 3 சோதனைகள் உள்ளன. மூன்றிலும் நெகட்டிவ் என்றால் தான் அவர் பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. துபாய் செல்வதற்கு முன்பே பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *