மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு !! 1

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர்களான ராபின் உத்தபா 19 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.

இதன்பின் வந்த சஞ்சு சாம்சன் 36 ரன்களிலும், கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 7 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு !! 3

ஹைதராபாத் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரசீத் கான் மற்றும் விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *