சென்னை அணி படும் அசிங்கத்திற்கு இது தான் காரணம்; உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீபன் பிளமிங் !! 1

வயது அதிகமான வீரர்களை வைத்து கொண்டு மூன்று ஆண்டுகள் விளையாடுவது சிரமமானது தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணி படும் அசிங்கத்திற்கு இது தான் காரணம்; உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீபன் பிளமிங் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் தங்களது பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 35* ரன்கள் எடுத்திருந்தார்.

இதனையடுத்து வெறும் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவிட்டாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

சென்னை அணி படும் அசிங்கத்திற்கு இது தான் காரணம்; உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீபன் பிளமிங் !! 3

நேற்றைய போட்டியில் அடைந்ததை தொடர்ந்து நடப்பு தொடரில் 7வது தோல்வியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட விட்டதால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அனுபவ வீரர்களை வைத்து கொண்டு மூன்று வருடங்கள் விளையாடுவது சிரமமானது தான் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அணி படும் அசிங்கத்திற்கு இது தான் காரணம்; உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்டீபன் பிளமிங் !! 4

இது குறித்து பேசிய ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், “கடந்த மூன்று வருட ஐபிஎல் தொடரை எடுத்து பார்த்தால், நாங்கள் கிட்டத்தட்ட ஒரே அணியை வைத்து தான் விளையாடி வருகிறோம். அனுபவ வீரர்கள் அதிகமாக உள்ள எங்கள் அணி கடந்த மூன்று வருடத்தில் முதல் ஆண்டு கோப்பையை வென்றது, கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதி போட்டியில் தான் தோல்வியடைந்தோம். ஆனால் வயது அதிகமான வீரர்களை அதிகமாக வைத்து கொண்டு மூன்றாவது ஆண்டு விளையாடுவது சிரமமாக தான் உள்ளது. அதே போல் துபாய் மைதானங்களும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *