சன் ரைசர்ஸிடம் ஈஷியாக சரணடைந்தது டெல்லி ; ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி !! 1

சன் ரைசர்ஸிடம் ஈஷியாக சரணடைந்தது டெல்லி ; ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

சன் ரைசர்ஸிடம் ஈஷியாக சரணடைந்தது டெல்லி ; ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி !! 2

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் 45 ரன்களும், பாரிஸ்டோ 53 ரன்களும், கேன் வில்லியம்சன் 41 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் ரபாடா மற்றும் அமித் மிஸ்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சன் ரைசர்ஸிடம் ஈஷியாக சரணடைந்தது டெல்லி ; ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி !! 3

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், துவக்கம் முதலே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

டெல்லி அணியின் மிக முக்கிய வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர் (17), தவான் (34), ரிஷப் பண்ட் (28), ஹெய்ட்மர் (21) என யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ரசீத் கான் மூன்று விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *