ஐபிஎல் தொடரை கண்டுகளிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அமீரக செயலாளர்! 1

ஐபிஎல் தொடரை கண்டுகளிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அமீரக செயலாளர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? இல்லையா?  என அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ துவங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஊரடங்கினால் மார்ச் மாதத்தில் இருந்து எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் இந்தியாவில் நடக்கவில்லை. குறிப்பாக மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் நடக்காததால் மிகப்பெரிய தொகை பிசிசிஐ-க்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரை கண்டுகளிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அமீரக செயலாளர்! 2
Fans during the 2nd T20 International match between India and Australia held at the Barsapara Cricket Ground, Guwahati on the 10th October 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இதனை சரிசெய்ய செப்டம்பர் அக்டொபர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவந்தது. இதற்கிடையில் அக்டொபர் – நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் நடக்காது என ஐசிசி தெரிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு ஐபிஎல் நிர்வாகம் அதே காலகட்டத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்தது.
செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக, அரபு நாட்டிற்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உட்பட அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரை கண்டுகளிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அமீரக செயலாளர்! 3
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி இருக்குமா? என்பதை தெரிவித்துள்ளார் முபாஷ்சிர் உஸ்மானி. இது குறித்து அவர் கூறுகையில்,
“இந்நாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க  30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம். அரசு அனுமதித்தால் அதே எண்ணிக்கையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்நாட்டு அரசு எடுத்த அதீத நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். விரைவில் முழுமையாக சரி செய்வோம்.
ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு இந்நாட்டில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக நாங்கள் 14 அணிகள் கொண்டு உலக கோப்பை தகுதி சுற்றினை நடத்தினோம். அதேபோல இந்த ஐபிஎல் தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்” என பேட்டியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *