பிப்ரவரி 18 இல் சென்னையில் நடைபெற்ற 2021 கானா ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் அனைத்து அணிகளும் தனக்கு தேவைப்பட்ட வீரர்களை மிக சிறப்பாக தேர்ந்தெடுத்தனர்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை டைட்டில் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்தாண்டு துபாய் அமீரகத்தில் நடைபெற்ற 2020 காண ஐபிஎல் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

முதலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் இறங்கிய கொல்கத்தா அணி போட்டியின் பாதியிலேயே இயான் மோர்கன் தலைமையில் பயணித்தது கொல்கத்தா அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பதவி ஒருவரிடமே இல்லாததுதான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் 2021 கான ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான இயான் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்துவார் என்று அந்த அணி தலைமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை தவிர அந்த அணியில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை, இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மேலும் இவருடைய எக்கனாமிக் ரேட்6.85.

இந்நிலையில் 2021 கான ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி தனது தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்தது.
ஷகிப் அல் ஹசன் 3.20 கோடி
ஹர்பஜன் சிங் 2 கோடி
பென் கட்டிங் 75 லட்சம்
பவான் நெகி 50 லட்சம்
வெங்கடேஷ் ஐயர் 20 லட்சம்
கருன் நாயர் 50 லட்சம்
செல்டன் ஜாக்சன் 20 லட்சம்
வைபவ் அரோரா 20 லட்சம்

இந்நிலையில் வாய்ப்பே கிடைக்காமல் பல வீரர்கள் இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தும் விளையாட முடியாமல் ஒரு சில வீரர்கள் இருக்கின்றன, அதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் வாய்ப்பு கிடைத்தும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு 5 வீரர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிகெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங், வெங்கடேச ஐயர், செல்டன் ஜாக்சன், வைபவ் ஆரவ் மற்றும் சந்திப் வாரியர்.