சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “சிஎஸ்கே அணியின் ஒரே பிரச்னை டெத் பவுலிங் தான். டெத் ஓவர்களில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர் சிஎஸ்கே அணியில் இல்லை. அதைத்தவிர சிஎஸ்கே அணியில் நெகட்டிவ் என்று சொல்ல எதுவுமே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டியில் விளையாடி அதில் 5 போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *