இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; டெல்லி அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; டெல்லி அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து பல்வேறு விசயங்களை பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த வருட தொடருக்கான டெல்லி அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள டெல்லி அணிக்கான ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவுமே இடம்பெற்றுள்ளனர். மிடில் ஆர்டரில் ரஹானே, ரிஷப் பண்ட் மற்றும் சிம்ரன் ஹெய்ட்மரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வினை தேர்வு செய்துள்ளார்.

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; டெல்லி அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 4

அதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அமித் மிஸ்ரா அல்லது அக்‌ஷர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆன்ரிக் நார்ட்ஜே, காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள டெல்லி அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, அஜிக்னியா ரஹானே, ரிஷப் பண்ட், சிம்ரன் ஹெய்ட்மர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்‌ஷர் பட்டேல்/ அமித் மிஸ்ரா, ரவிச்சந்திர அஸ்வின், அன்ரிக் நார்ட்ஜே, காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா/ உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *