முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆரவராத்துடன் நடத்தப்படும் இந்த தொடர், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மட்டும் சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது.

14வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது நிலையில் சென்னையில் நடந்த ஏலத்தில் மிகச் சிறந்த யுக்திகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 2
இந்த வருடத்திற்கான ஏலத்தில் 1098 வீரர்கள் தங்களது பெயரை 2021 காண ஐபிஎல் போட்டிக்கு பதிவு செய்தனர் ஆனால் அதிலிருந்து 298 வீரர்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கி இந்த ஏலத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அறிமுகமான இளம் திறமையான வீரர்களை தங்களது அணியில் சேர்ப்பது அனைத்து அணிகளும் ஆர்வம் கொண்டிருந்தனர் அவ்வாறு அணியில் சேர்க்கப்பட்ட 5 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

ஷாருக்கான்

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 3

சமீபமாக நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி போட்டியில் மிகச் சிறப்பாக செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் தனது ஆரம்ப தொகையாக 20 லட்சத்தை நினைத்திருந்தார், இவரை அனைத்து அணிகளும் தங்கள் அணியில் சேர்ப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தொகையை அதிகரித்தது இந்நிலையில் மிக சாமர்த்தியமாக பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 5.25 கோடிக்கு தனது அணியில் ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

ஜெகதீச சுஜித்

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 4

ஐபிஎல் போட்டிகளில் வெறும் 15 போட்டிகள் மட்டுமே பங்கேற்ற சுஜித் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு தனது அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது தனது ஆரம்ப தொகையாக 20 லட்சத்தை மட்டுமே நிர்ணயித்து இருந்த சீதை ஐதராபாத் அணி 30 லட்சத்திற்கு தனது அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

சேட்டன் சக்கரியா

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 5

சேட்டன் சக்கரியா இதுவரை சர்வதேச போட்டி கிலோ அல்லது எந்த ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடியது கிடையாது ஆனால் ரஞ்சி டிராபி மற்றும் சையது முஷ்டாக் அழி போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட சக்கரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்து தனது அணியில் ஒப்பந்தம் செய்து கொண்டது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் அறிமுக வீரரான சேட்டன் சகரியா ஒரு நல்ல தொகைக்கு விலை போனது ரசிகர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

ஜலஜ் சக்சேனா

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 6

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2021 கான ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுத்த 9 வீரர்களில் சக்சேனாவும் ஒருவர்,ஆல்ரவுண்டரான இவர் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இதுவரை அவர் ஒரு போட்டியில் கூட விளையாண்டது கிடையாது ஆனால் இந்த முறை நிச்சயம் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் சக்சேனா தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோண சிரிகர் பரத்

முதல் தொடரிலேயே அடித்த யோகம்; ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஐந்து வீரர்கள் !! 7

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனா பரத் 2015 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் இருந்தபோதும் இவர் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட இதுவரை விளையாண்டது கிடையாது, மேலும் இவர் ஒரு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது கிடையாது, இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை 20 லட்சத்திற்கு தனது அணியில் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *