தோனி முதல் ஹரி நிஷாந்த் வரை; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல் இதோ !! 1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.

தோனி முதல் ஹரி நிஷாந்த் வரை; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல் இதோ !! 2

மேலும் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சரியாக செயல்படாத ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதர் ஜாதவ் போன்ற பல முன்னணி வீரர்களை சென்னை அணி கைவிட்டது. மேலும் அந்த அணியின் துவக்க வீரரான ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.எனவே மிக சிறப்பாக செயல்பட்டு தங்களுக்குத் தேவைப்படும் வீரர்களை சென்னை அணி தேர்ந்தெடுத்தது.

ஒரு அணியில் 18 வீரர்கள் முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள்தான் இருக்க வேண்டும் மேலும் அதிலும் குறிப்பாக 8 வீரர்கள் மட்டும் தான் வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விதிமுறை விதித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை மிகச்சிறப்பாக தேர்ந்தெடுத்தது.

தோனி முதல் ஹரி நிஷாந்த் வரை; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல் இதோ !! 3இந்த ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. குறிப்பாக ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அதுவும் கைவசம் இருக்கும் மொத்த பணத்தையும் அப்படியே வைத்து அழகு பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வீரருக்கு 9 கோடி ரூபாய் கொடுத்தது தான் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதே போல் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொய்ன் அலியை 7 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண்போம்.

சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேஎம் ஆசிப் ,தீபக் சஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, டூப்லஸ்ஸிஸ்,இம்ரான் தாஹிர், மொயின் அலி, கிருஷ்ணப்ப கௌதம்,ஜெகதீசன், கார்ன் சர்மா,லுங்கி இங்கிடி, மிச்சல் சாட்னர்,ரவீந்திர ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட், சர்தால் தாகூர்,சாம் கரன், ஜோஷ் ஹஸல்வுட், சாய் கிஷோர், பகத் வர்மா, ஹரி நிஷாந்த் மற்றும் ஹரிசங்கர் ரெட்டி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *