2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழுமையான வீரர்களின் தொகுப்பு !! 1

சமீபமாக சென்னையில் நடைபெற்ற 2021 கானா ஐபிஎல் போட்டியில் ஏலத்தில் அனைத்து அணிகளும் சிறந்த யுக்திகளை மேற்கொண்டு தனக்கு தேவைப்படும் வீரர்களை சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்தது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தனக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக பட்சமாக 8 வீரர்களை மட்டும் தான் வெளிநாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.

ஐபிஎல் போட்டியின் மிக பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழுமையான வீரர்களின் தொகுப்பு !! 2

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான டேவிட் வார்னரின் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஆண்டு மிக சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது,இருந்தபோதும் ஹைதராபாத் அணியால் டைட்டில் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஹைதராபாத் அணி சில வீரர்களை அணியில் இருந்து நீக்கியது.

10.75 கோடி மட்டுமே வைத்திருந்த ஹைதராபாத் அணி பிப்ரவரி 18இல் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் பக்காவாக ப்ளான் செய்து தனக்கு தேவைப்படும் வீரர்களை தட்டி தூக்கியது. டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ரஷித் கான் முஹம்மத் நபி,ஜேசன் ஹோல்டர்,ஜானி பேர்ஸ்டோ, நடராஜன், புவனேஸ்வர் குமார் போன்ற உலகின் தலை சிறந்த வீரர்களை உள்ளடக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2021 ஐபிஎல் போட்டி கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழுமையான வீரர்களின் தொகுப்பு !! 3

2021 கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள். டேவிட் வார்னர், அபிஷேக் ஷர்மா, பாசில் தம்பி, புவனேஸ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே முஹம்மத் நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, சபாஷ் நதிம், ஸ்ரிவட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அஹமத், டி நடராஜன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா, விராத் சிங், பிரியம் கர்க், மிச்செல் மார்ஸ், ஜேசன் ஹோல்டர், மற்றும் அப்துல் சமத்,இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் மிடில் ஆர்டர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய பேட்ஸ்மேன் ஆகிய இரு வீரர்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணி மிக சிறப்பாக செயல்பட்டு புதிதாக வீரர்களைத் தேர்ந்தெடுத்து.

கேதர் ஜாதவ் 2 கோடி

முஜிபுர் ரஹ்மான் 1.5 கோடி

ஜே சுசித் 30 லட்சம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *