மேலும் இரண்டு ஐபிஎல் வீரருக்கு கொரோனா உறுதி ! பீதியில் ரசிகர்கள் 1

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

மேலும் இரண்டு ஐபிஎல் வீரருக்கு கொரோனா உறுதி ! பீதியில் ரசிகர்கள் 2

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

2021 ஐபிஎல் சீசன் ஒட்டுமொத்தமாக ரத்து ! பிசிசிஐ அதிரடி முடிவு ! 2

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன்பிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது.

இவர்களை தொடர்ந்து இன்று சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான விருதிமான் சஹாவுக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்பின் பவுலரான அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களிடையே மேலும் மேலும் அச்சமத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஐபிஎல் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் தற்போது ஐபிஎல் தொடரை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ஐபிஎல் வீரருக்கு கொரோனா உறுதி ! பீதியில் ரசிகர்கள் 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *