சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

கடந்த வருட தொடரை போலவே இந்த வருடமும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லை என தான் கருதுவதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “கடந்த தொடரில் செயல்பட்டதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு கூடுதலகாக உழைக்க வேண்டும் என்று கருதுகிறேன், ஆனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது சற்று கடினம் தான் என நினைக்கிறே” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பல்வேறு விசயங்களை பேசிய கவுதம் கம்பீர், இந்த வருட ஐபிஎல் ஏலம் தான் சென்னை அணிக்கு சிறந்த ஏலம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கம்பீர் பேசுகையில், “இந்த வருடத்திற்கான ஐபிஎல் ஏலம் தான் சென்னை அணிக்கு மிக சிறந்த ஏலமாக இருக்கும் என கருதுகிறேன். இந்த வருடத்திற்கான ஏலத்தில் வெறும் 3 வீரர்களை மட்டும் சரியான விலை கொடுத்து வாங்கிவிட்டு சென்னை நிர்வாகிகள் சந்தோசமாக அமர்ந்து கொண்டனர். கிளன் மேக்ஸ்வெலை எடுக்க கடுமையாக போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவருக்கான விலை ஏற ஏற அப்படியே ஒதுங்கி கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியிருந்த விலையில், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொய்ன் அலி என இரண்டு சிறந்த ஆல் ரவுண்டர்களை எடுத்து கொண்டது பாராட்டப்பட வேண்டியது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *