பெங்களூரு அணி பெரிதும் நம்பியிருக்கும் வீரர் இவர்தான்; பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்!! 1

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

பெங்களூரு அணி பெரிதும் நம்பியிருக்கும் வீரர் இவர்தான்; பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்!! 2

இந்நிலையில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்று ஆக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது, ஏனென்றால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து விதமான தொடர்களில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுத்திருக்கிறார் ஆனால் ஐபிஎல் போட்டியில் மட்டும் இவரது தலைமையிலான பெங்களூர் வாணி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் தனது அணியை வலுப்படுத்தும் நோக்கில் பல மாற்றங்களை பெங்களூரு அணியில் கொண்டு வந்தது,குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெலை 14.25 கோடி கொடுத்து போட்டிபோட்டு தனது அணியில் ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சரியாக செயல்படாத காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி பெரிதும் நம்பியிருக்கும் வீரர் இவர்தான்; பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்!! 3

நக்சல் பற்றி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திபன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் பலமுறை ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்துள்ளார் இருந்தபோதும் இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை இந்நிலையில் பெங்களூரு அணிக்கு தேர்வான கிளன் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியை வழு படுத்துவார் என்று பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி கிளன் மேக்ஸ்வெலை பெரிதும் நம்பியிருக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *