அந்த சீனியர் வீரருக்கு சென்னை அணி வாய்பே கொடுக்காது; பரிதாபப்படும் முன்னாள் வீரர் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள சட்டீஸ்வர் புஜாராவுக்கு சென்னை அணியின் ஆடுல் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்த சீனியர் வீரருக்கு சென்னை அணி வாய்பே கொடுக்காது; பரிதாபப்படும் முன்னாள் வீரர் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த சீனியர் வீரருக்கு சென்னை அணி வாய்பே கொடுக்காது; பரிதாபப்படும் முன்னாள் வீரர் !! 3

இந்தநிலையில், இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சீனியர் வீரர்களில் முதன்மையானவராக இருக்கும் சட்டீஸ்வர் புஜாரா குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஓஜா, சென்னை அணியின் ஆடும் லெவனில் புஜாராவிற்கு வாய்ப்பு கிடைக்காது என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த சீனியர் வீரருக்கு சென்னை அணி வாய்பே கொடுக்காது; பரிதாபப்படும் முன்னாள் வீரர் !! 4

இது குறித்து பிரக்யான் ஓஜா பேசுகையில், “புஜாராவிற்கு முதல் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதுகிறேன். அவர் அணியில் இருப்பார் ஆனால் விளையாடும் ஆடும் லெவனில் இடம் இருக்காது என்பதே எனது கணிப்பு. முதல் சில போட்டிகளில் எதாவது ஒருவர் சொதப்பினால் புஜாராவிற்கு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம், ஆனால் நிச்சயமாக முதல் சில போட்டிகளில் புஜாராவிற்கு வாய்ப்பே கிடைக்காது. புஜாரா மிக சிறந்த பேட்ஸ்மேன், அனைத்து விதமான பார்மட்களிலும் சிறப்பாக விளையாடும் அளவிற்கு திறமையான வீரர். 7 வருடங்களுக்கு பிறகு புஜாரா ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது, அதிகமான இளம் வீரர்களுக்கு முன்மாதிரி புஜாரா தான். புஜாரா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

அந்த சீனியர் வீரருக்கு சென்னை அணி வாய்பே கொடுக்காது; பரிதாபப்படும் முன்னாள் வீரர் !! 5

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *