மும்பயும் இல்லை சென்னையும் இல்லை, இந்த ஆண்டு கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் - ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை 1

இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறைகூட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூன்று முறை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடி சுற்றுக்கு தகுதி அடைந்த அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள முதல் பாதியில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்து போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்தில் தற்போது உள்ளது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இரண்டாவது பாதியாக இன்று முதல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செயல்படும் என்று ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிக சிறப்பாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

மும்பயும் இல்லை சென்னையும் இல்லை, இந்த ஆண்டு கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் - ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை 2

இது பற்றி பேசத் தொடங்கிய அவர் இதுவரை நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிக அபாரமாக விளையாடியது. விராட் கோலி சிறப்பான பார்மில் இல்லாத நிலையிலும் அந்த அணியால் 5 போட்டிகளில் வெற்றி அடைய முடிந்தது. மேக்ஸ்வெல் மிக அற்புதமாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஏபி டிவிலியர்ஸ் கீழ் வரிசையில் வந்து விளையாடுவது சரியாக இருக்குமா என்று அனைவரும் நினைத்து நிலையில், அவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் பாதியில் அனைவருக்கும் பதிலளித்தார். படிகள் மிக அற்புதமாக கடைசி கட்ட நேரத்தில் தன்னுடைய அதிரடியை காட்டினார்.

ராயல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் சஹால் அவ்வளவு சிறப்பாக விளையாடி விட்டு எடுக்க தவறினார். இருப்பினும் அவருக்கும் சேர்த்து ஹர்ஷால் பட்டேல் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் மட்டுமின்றி மற்ற பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மிக சிறப்பான பார்மில் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா விளக்கம் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய ஆட்டங்களிலும் மிக சிறப்பாக பெங்களூரு அணி செயல்படும்

மும்பயும் இல்லை சென்னையும் இல்லை, இந்த ஆண்டு கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் - ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை 3

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பற்றி பேசிய அவர் நிச்சயமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் பாதி ஆட்டங்களில் விராட் கோலியை தன்னுடைய அதிரடியை காட்டுவார் என்றும், அவருக்குத் துணையாக டிவிலியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியின் வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ஹர்ஷால் பட்டேல் இந்திய மண்ணில் செயல் பட்டது போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட மாட்டார் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவை ஒப்பிட்டு பார்த்தால் ஐக்கிய அரபு அமீரகம் தட்பவெப்பநிலை மைதானம் முற்றிலுமாக மாறி காணப்படும். எனவே இந்திய மண்ணில் அவர் காட்டிய அதிரடி பந்து வீச்சில் இங்கு அந்த அளவுக்கு காட்ட முடியாது. எனினும் பெங்களூரு அணி ஒரு அணியாக இணைந்து மீதமுள்ள போட்டியில் மிக சிறப்பாக செயல்படும் என்றும் நிச்சயமாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பெங்களூரு அணியில் விளையாடும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறி முடித்தார்.

7 போட்டிகளில் 5 வெற்றிகண்ட பெங்களூரு அணி மீதமுள்ள 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி அடைந்தாலே நிச்சயமாக அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை விராட் கோலி தலைமையில் பெங்களூரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *