டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசியுள்ளார் கபில் தேவ் !! 1

புதிதாக கேப்டன் அவதாரம் எடுத்துள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் இந்த முறை கோப்பையை வெல்ல முடியுமா இல்லையா என்ற விவாதம் குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான கபில் தேவ் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசியுள்ளார் கபில் தேவ் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசியுள்ளார் கபில் தேவ் !! 3

இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகள் பட்டியலில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் அணியாக உள்ளது. அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது தலைமையில் டெல்லி அணி எப்படி செயல்படும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலர் டெல்லி அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகயில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறீத்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ், இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெல்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசியுள்ளார் கபில் தேவ் !! 4

இது குறித்து கபில் தேவ் பேசுகையில், “இந்த மூறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே கருதுகிறேன், 25 முதல் 26 சதவீதம் மட்டுமே ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன், அதற்கு மேல் டெல்லி அணியிடம் இருந்து பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்கு புதியவர், அவருக்கு நிச்சயம் நிறைய அனுபவங்கள் தேவைப்படும். முதல் தொடரிலேயே அனைத்து அனுபவங்களையும், நுனுக்கங்களையும் கற்று கொள்வது அனைவருக்கும் கடினமே” என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசியுள்ளார் கபில் தேவ் !! 5

மேலும் பேசிய கபில் தேவ், “கேப்டன் பதவி என்பது மிக அதிகமான பொறுப்புகளை கொண்டது. கேப்டன் பதவி என்பது ரிஷப் பண்டிற்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும். ரிஷப் பண்ட் தனது பயமில்லாத ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றாமல் விளையாடுவதே எதிர்காலத்தில் ரிஷப் பண்டிற்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவரா இல்லையா என்பதை புரிந்து கொள்வதற்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *