சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை அசால்டாக அடித்து விரட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 2

டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 220 ரன்கள் குவித்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை அசால்டாக அடித்து விரட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 3

இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மணிஷ் பாண்டே 31 ரன்களும், பாரிஸ்டோ 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு சுமாரான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை அசால்டாக அடித்து விரட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 4

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் கிரிஸ் மோரிஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் கார்த்திக் தியாகி மற்றும் ராகுல் திவாடியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *