பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் டி.20 தொடரில் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்; பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி !! 2

அப்பண்டிக்ஸ் பிரச்சனை காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக மாயன் அகர்வால் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியை வழிநடத்த உள்ளார். இதனால் இந்த போட்டியில் பிரப்சிம்ரன் சிங் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். அதே போல் தொடர்ந்து சொதப்பி வந்த நிக்கோலஸ் பூரன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டேவிட் மாலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்; பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி !! 3

அதே வேளையில் இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரன் ஹெய்ட்மர், அக்‌ஷர் பட்டேல், லலீத் யாதவ், காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, ஆவேஸ் கான்.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணி;

மாயன்க் அகர்வால் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கிரிஸ் கெய்ல், டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஹர்பிரீட் பிரார், கிரிஸ் ஜோர்டன், ரிலே மெரிடித், ரவி பிஸ்னோய், முகமது ஷமி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *