தன்னந்தனியாக போராடிய சஞ்சு சாம்சன்; டெல்லியிடம் ஈசியாக வீழ்ந்தது ராஜஸ்தான் !! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தன்னந்தனியாக போராடிய சஞ்சு சாம்சன்; டெல்லியிடம் ஈசியாக வீழ்ந்தது ராஜஸ்தான் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் 43 ரன்களும், சிம்ரன் ஹெய்ட்மர் 28 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 154 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான லிவிங்ஸ்டோன் (1) மற்றும் ஜெய்ஸ்வால் (5) வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

தன்னந்தனியாக போராடிய சஞ்சு சாம்சன்; டெல்லியிடம் ஈசியாக வீழ்ந்தது ராஜஸ்தான் !! 3

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தாலும், சஞ்சு சாம்சனுக்கு மற்ற வீரர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதாலும், சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட தவறியதாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தன்னந்தனியாக போராடிய சஞ்சு சாம்சன்; டெல்லியிடம் ஈசியாக வீழ்ந்தது ராஜஸ்தான் !! 4

டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது தவிர பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *