கேன் வில்லியம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மும்பையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணி இது தான் !! 1

2021 காண ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒவ்வொரு அணியும் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக போராடி வருகிறது, இந்நிலையில் 9வது போட்டியாக இன்று நடைபெற உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது.

இந்த 2021 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் இரண்டு அணிகள் என எதிர்பார்க்கப்படுகிற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோத உள்ளதால் பார்ப்பதற்கே மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கேன் வில்லியம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மும்பையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணி இது தான் !! 2

இந்நிலையில் கடந்த வருடம் மிக சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பல போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருந்தபோதும் டைட்டில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் ஹைதராபாத் அணி இந்த 2021 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பிரடிக்சன் லெவனை கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஒரு முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் பலமுறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஆனால் 2021 ஐபிஎல் தொடரில் இறங்கிய முதல் இரண்டு போட்டியிலும் ஒற்றை டிஜிட் ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார், இதன் காரணமாக அவருக்கு பதில் இளம் பேட்ஸ்மேனான ஸ்ரிவர்ட் கோஸ்வாமி களமிரங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தவிர்த்து வேறெதுவும் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கேன் வில்லியம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மும்பையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணி இது தான் !! 3

மும்பை இந்தியன்ஸ் கெதிரான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பிரடிக்சன் லெவன்.

டேவிட் வார்னர் (c),ஜானி பேர்ஸ்டோ (wk) ஸ்ரிவட் கோஸ்வாமி, மணிஷ் பாண்டே, அப்துல் சமத், விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், சபாஷ் நதீம், நடராஜன், ரஷித் கான், புவனேஸ்வர் குமார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *