ஹைதராபாத் அணியுடன் மோத உள்ள மும்பை படை இது தான் !! 1

2021 காண ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒவ்வொரு அணியும் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக போராடி வருகிறது, இந்நிலையில் 9வது போட்டியாக இன்று நடைபெற உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது.

இந்த 2021 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் இரண்டு அணிகள் என எதிர்பார்க்கப்படுகிற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோத உள்ளதால் பார்ப்பதற்கே மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் அணியுடன் மோத உள்ள மும்பை படை இது தான் !! 2

இந்நிலையில் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கியது. பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் 5 முறை டைட்டீல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூர் அணியிடம் பரிதாபமாக தோல்வியைத் தழுவியது இதன் பின் நடைபெற்ற 2வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் ராகுல் சஹாரின் உதவியாள் த்ரில்லர் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியுடன் மோத உள்ள மும்பை படை இது தான் !! 3

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரடிக்சன் லெவனை கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்வு செய்துள்ளனர்.

நாளை நடைபெற உள்ள இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற உள்ளது,சென்னை அணி மைதானம் மிகவும் மந்தமாக இருப்பதால் ஜெயந் யாதவிற்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இதைத் தவிர்த்து மற்ற அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் வீரர்கள் என கருதப்படும் முக்கிய வீரர்கள் அனைவரும் களம் இறங்குவார்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரடிக்சன் 11

ரோஹித் சர்மா(c), குயின்டன் டி காக்(wk), கெரான் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, கிருனால் பண்டியா, இஷன் கிஷன்,சூர்யகுமார் யாதவ், ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட், பும்ராஹ் மற்றும் ஜெயன்ட் யாதவ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *