2021 ஐபிஎல் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் 1

சமீபமாக சென்னையில் நடந்த 2021 காண ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் அனைத்து அணிகளும் சிறந்த யுத்திகளை கையாண்டு தனக்கு தேவைப்படும் வீரர்களை மிக நேர்த்தியாக தேர்ந்தெடுத்துள்ளது. ஒரு அடிக்கு 18 முதல் 25 அணிகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் மேலும் அதில் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்ற பிபிசிஐ யின் விதிமுறை உள்ளது.இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் தனக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு 2021 காண ஐபிஎல் போட்டி டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதோடு சேர்த்து ஐந்துமுறை டைட்டில் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்திடாத சாதனையை செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு கஷ்டமும் படாமல் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

2021 ஐபிஎல் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் 2

T20 போட்டிக்கு உலகின் மிகச்சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக செயல்படும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு தனது அணியில் இருந்து லசித் மலிங்கா, ஜேம்ஸ் பாட்டின்சன் போன்ற பல வீரர்களையும் தனது அணியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2021 கான ஐபிஎல் போட்டியிலும் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது, உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் அந்த அணியில் இருந்த நிலையிலும், அந்த அணிக்கு பேக்கப் வீரர்கள் தேவையுள்ளது. கோர் அணியில் எந்த மாற்றமும் செய்ய தேவைப்படாத மும்பை இந்தியன்ஸ் அணி, 2021 கான ஐபிஎல் போட்டியில் புது வீரர்களை சமீபமாக சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்திருக்கிறது.

2021 ஐபிஎல் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் 3வருகிற 2021 ஐபிஎல் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுவிட்டால் எந்த அணியும் செய்யமுடியாத ஒரு மிகப்பெரும் சாதனை செய்த அணியாக மாறிவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினர்.நாதன் கொல்டர் நைல் 5 கோடி

ஆடம் மில்னே 3.20 கோடி

பியூஸ் சாவ்லா 2.40 கோடி

ஜேம்ஸ் நீசம் 50 லட்சம்

மார்கோ ஜென்சன் 20 லட்சம்

யுத்விர் சரக் 20 லட்சம்

அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்சம்

2021 ஐபிஎல் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் 4

இந்நிலையில் 2021 காண மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

ரோகித் சர்மா ஆதித்ய தாரே, அமால்பிரிட் சிங்க், அனுகுள் ராய், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரான் பொலார்ட், க்ருனால் பாண்டியா, குயின்டன் டி காக், ராகுல் சஹர், சூர்யகுமார் யாதவ், டிரென்ட் போல்ட், கிறிஸ் லின், சவுரப் திவாரி, மற்றும் முஹ்சின் கான்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *