14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது.

அப்ப தோனி தந்த எல்லா டிப்ஸையும் நான் கடைபிடித்து வருகிறேன் ! - நடராஜன் வெளிப்படை 2

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் 16 போட்டிகளில் விளையாடி தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத் தொடரில் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நடராஜன் மூன்று பார்மட்களிலும் அறிமுகமாகினார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் மொத்தம் 11 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி வந்த இவர் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்த்த போது நடராஜன் சொந்த காரணத்தால் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

அப்ப தோனி தந்த எல்லா டிப்ஸையும் நான் கடைபிடித்து வருகிறேன் ! - நடராஜன் வெளிப்படை 3

தற்போது இந்த ஐபிஎல் சீசனுக்காக நடராஜன் தனது அணியுடன் இணைந்து தீவிராமாக பயிற்சி மோற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடராஜன் கடந்த சீசனில் போட்டி முடிவடைந்து தோனியுடன் நேரம் செலவிட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். அப்போது தோனி நடராஜனுக்கு முக்கிய டிப்ஸ்களை கொடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து நடராஜன் தற்போது பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “கடந்த சீசனில் போட்டி முடிந்த பிறகு எனக்கு தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தோனி போன்ற ஒருவருடன் பேச வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போது தோனி எனக்கு கிரிக்கெட்டில் எப்படி நிலைத்து விளையாட வேண்டும் என்று சொன்னார்.

அப்ப தோனி தந்த எல்லா டிப்ஸையும் நான் கடைபிடித்து வருகிறேன் ! - நடராஜன் வெளிப்படை 4

பந்துவீச்சில் யார்க்கர் மட்டும் போடாமல் பவுன்சர் மற்றும் கட்டர் ஆகியவற்றை மாற்றி மாற்றி வீச வேண்டும் என்றார். தோனியின் இந்த டிப்ஸை நான் கடைப்பிடித்து வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்றார் நடராஜன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *