என்னை அதி காலை 3மணிக்கு வரச்சொல்லி பயிற்சியை மேற்கொள்வார்; சுவாரசியமான தகவலை கூறிய டெல்லி அணியின் பயிற்சியாளர் 1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

என்னை அதி காலை 3மணிக்கு வரச்சொல்லி பயிற்சியை மேற்கொள்வார்; சுவாரசியமான தகவலை கூறிய டெல்லி அணியின் பயிற்சியாளர் 2

இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர்களில் டெல்லி அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா முதன்மையானவராக உள்ளார். மிக மோசமான ஆட்டத்தால் கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த ப்ரித்வி ஷா இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவருக்கு டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ப்ரித்வி ஷாவிற்கும் இது மிக முக்கியமான தொடராகவே பார்க்கப்படுகிறது.

என்னை அதி காலை 3மணிக்கு வரச்சொல்லி பயிற்சியை மேற்கொள்வார்; சுவாரசியமான தகவலை கூறிய டெல்லி அணியின் பயிற்சியாளர் 3

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை, இவர் 13 போட்டிகளில் பங்கேற்று 228 ரன்கள் அடித்தார், அதில் 2 அரசதமும் அடங்கும்,மேலும் அந்த தொடரில் இவருடைய ஸ்டிரைக் ரெட் 136.52. மேலும் அதனை தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இவர் 0,4 என சொற்ப ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார் இதன் காரணமாக அதற்கு அடுத்த போட்டியில் இவருக்கு இடமளிக்கவில்லை. இந்நிலையில் வெறியுடன் முயற்சியை மேற்கொண்ட பிரித்வி ஷா விஜய் ஹசாரே போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் மிக சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா, இந்த தொடரில் மொத்தம் 8 போட்டிகளில் 827 ரன்கள் குவித்ததோடு, 4 சதம் அடித்து அசத்தினார், இந்த தொடரில் அதிகபட்சமாக 227* அடித்தார். மேலும் இறுதி போட்டியில் 39 பந்துகளில் 73 ரன்கள் குவித்து மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

என்னை அதி காலை 3மணிக்கு வரச்சொல்லி பயிற்சியை மேற்கொள்வார்; சுவாரசியமான தகவலை கூறிய டெல்லி அணியின் பயிற்சியாளர் 4

இந்நிலையில் 21 வயதே ஆகும் பிரித்வி ஷா குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே தெரிவித்ததாவது,சமீபமாக நடந்த விஜய் ஹசாரே போட்டியில்பிரித்வி ஷா சிறப்பாக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். தற்பொழுது அருமையான பார்மில் இருக்கும் இவர் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் அதுதான் எங்களுக்கும் மிகவும் முக்கியம், மேலும் இவர் தற்பொழுது அதிகமான நேரங்களை பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார், இவர் என்னை அதி காலை 3:00 மணி அளவில் வரச்சொல்லி பந்துகளை வீச சொல்லி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் மேலும் அதற்கு நாங்களும் ஒத்துழைகிறோம் என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *