ஏன் இந்த வீரருக்கு நாங்கள் கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தோம்; சீக்ரெட்டை ஓபன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 1

தென் ஆப்ரிக்கா அணியின் சீனியர் வீரரான கிரிஸ் மோரிஸை கடுமையான போட்டிக்கு பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆரவராத்துடன் நடத்தப்படும் இந்த தொடர், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மட்டும் சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது.

14வது சீசனுக்கான இந்த வருட தொடர் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18இல் நடைபெற்றது.

ஏன் இந்த வீரருக்கு நாங்கள் கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தோம்; சீக்ரெட்டை ஓபன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 2

இந்த வருடத்திற்கான ஏலத்தில் 1098 வீரர்கள் தங்களது பெயரை 2021 காண ஐபிஎல் போட்டிக்கு பதிவு செய்தனர் ஆனால் அதிலிருந்து 298 வீரர்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கி இந்த ஏலத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் கடந்த முறை பெங்களூர் அணிக்காக விளையாடிய ஆல் ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் ஏலத்திற்கு வந்ததும் அவருக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நீண்ட நேரம் போராடின.

வெறும் 75 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த கிரிஸ் மோரிஸுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடியதால், அவருக்கான மதிப்பு சரசரவென உயர்ந்தது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கடுமையாக போராடின. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிரிஸ் மோரிஸை தட்டி தூக்கியுள்ளது.

ஏன் இந்த வீரருக்கு நாங்கள் கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தோம்; சீக்ரெட்டை ஓபன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !! 3

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விலை போன வீரர்கள் பட்டியலில், யுவராஜ் சிங்கை (16 கோடி) பின்னுக்கு தள்ளி கிரிஸ் மோரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுபற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சீஃப் ஆப்பரேட்டிங் ஆபீஸர் மெக்ரம் கூறியதாவது,முதலில் நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் நன்றியை தெரிவிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் கிறிஸ் மோரிஸ் மீதான ஏலத்தை நிறுத்த வில்லை என்றால் அது எங்களுக்கு அது மிகப் பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும் என்று கூறினார்,மேலும் அவர் கூறியதாவது கிறிஸ் மோரிஸ்க்கு என்று தனித்துவமான திறமைகள் உள்ளது,அதனால்தான் நாங்கள் அவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தோம். இவரால் லோ ஆர்டரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்,மேலும் டெத் ஓவர் வீசக்கூடியதில் வல்லவராகத் திகழ்வார்.இவருடைய அனுபவமும் திறமையும் நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெறச் செய்யும் என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *