இந்த தடவ நாங்க தட்றோம்.. தூக்குறோம்..; அடித்து சொல்லும் சீனியர் வீரர் !!!! 1

கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு இல்லை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தடவ நாங்க தட்றோம்.. தூக்குறோம்..; அடித்து சொல்லும் சீனியர் வீரர் !!!! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் நாளை முதல் துவங்க உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த தடவ நாங்க தட்றோம்.. தூக்குறோம்..; அடித்து சொல்லும் சீனியர் வீரர் !!!! 3

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள சீனியர் வீரர் ரவிச்சந்திர அஸ்வின், கடந்தாண்டு நாங்கள் ஒரு மிகச் சிறந்த அணியாக இருந்தோம் ஆனால் எதிர்பாராதவிதமாக எங்களால் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாட முடியவில்லை மேலும் கடந்த ஆண்டு லாக் டவுனாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அந்த ஒரு சூழ்நிலை இல்லை.மேலும் ரிஷப் பண்ட் மிகச்சிறந்த பார்மில் இருப்பதால் இந்த வருடம் எங்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த தடவ நாங்க தட்றோம்.. தூக்குறோம்..; அடித்து சொல்லும் சீனியர் வீரர் !!!! 4

மேலும் அவர் தெரிவித்ததாவது நான் தற்பொழுது மிகவும் ஆர்வமாக உள்ளேன் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிக சிறப்பாக செயல்படுவேன், நிச்சயம் எனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பேன் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது,இதில் பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி டைட்டில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *