சென்னை அணியின் மிகப்பெரும் பலமே இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் ரீ எண்ட்ரீ சென்னை அணிக்கு நிச்சயம் கூடுதல் பலத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அணியின் மிகப்பெரும் பலமே இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா, சுரேஷ் ரெய்னாவின் ரீ எண்ட்ரீ சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் மிகப்பெரும் பலமே இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இது குறித்து பிரக்யான் ஓஜா பேசுகையில், “கடந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவின் அனுபவ பேட்டிங்கை மிஸ் செய்திருக்கும். தோனியின் மிகப்பெரும் நம்பிக்கையாக திகழ்பவர் சுரேஷ் ரெய்னா தான். எப்பேற்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் தோனிக்கு தேவையானதை சுரேஷ் ரெய்னா மிக சரியாக செய்து கொடுப்பார். சென்னை அணிக்காக சுரேஷ் ரெய்னா நீண்ட காலமாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா மிக முக்கிய வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி ரகசியத்தை எடுத்து பார்த்தால் அதில் சுரேஷ் ரெய்னாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் தோனிக்கே அட்வைஸ் கொடுக்கும் அளவிற்கு சுரேஷ் ரெய்னா சிறந்த வீரர். சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது, அதுவே சென்னை அணிக்கும் கை கொடுத்து வருகிறது. கடந்த வருட தொடரில் சுரேஷ் ரெய்னா மட்டும் இருந்திருந்தால் சென்னை அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்திருக்காது என தோனியே நிச்சயம் யோசித்திருப்பார்” என தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் மிகப்பெரும் பலமே இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *