சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 1

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, டேவிட் மாலன் (26), கிரிஸ் கெய்ல் (13) போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், தனி ஒருவனாக இறுதி வரை கடுமையாக போராடிய மாயன்க் அகர்வால் 99 ரன்கள் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 166 ரன்கள் எடுத்தது.

சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 3

இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வழக்கம் போல், ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 4

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன் குவித்த இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்திருந்த போது, ப்ரித்வி ஷா (39) விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த 24 ரன்களிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், பஞ்சாப் பந்துவீச்சாளர்களை ஒரு பொருட்டாவே மதிக்காத ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்ததன் மூலம் 17.4 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 5

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் கிரிஸ் ஜோர்டன், ஹர்பிரீத் ப்ரார் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தநிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்;

RankTeamMatchesWonLostTied/No ResultNet Run RatePoints
1DC8620/0+0.54712
2CSK7520/0+1.26310
3RCB7520/0-0.17110
4MI7430/0+0.0628
5RR7340/0-0.1906
6PBKS8350/0-0.3686
7KKR7250/0-0.4944
8SRH7160/0-0.6232

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *