ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை படை; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 1

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

14வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை படை; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவிண்டன் டி காக் 40 ரன்களும், ரோஹித் சர்மா 32 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கீரன் பொலார்டு 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக முஜிபுர் ரஹ்மான் மற்றும் விஜய் சங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை படை; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 3

இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 36 ரன்களும், ஜானி பாரிஸ்டோ 43 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் (28) மற்றும் விராட் சிங் (11) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் 19.4 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியும் அடைந்தது.

ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை படை; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 4

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் மற்றும் டிரண்ட் பவுல்ட் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த பெங்களூர் அணி இரண்டாவது இடத்திற்கு, இரண்டாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

மும்பை – ஹைதராபாத் போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்;

RankTeamMatchesWonLostTied/No ResultNet Run RatePoints
1MI3210/0+0.3674
2RCB2200/0+0.1754
3CSK2110/0+0.6162
4DC2110/0+0.1952
5RR2110/0+0.0522
6KKR2110/00.0002
7PBKS2110/0-0.9092
8SRH3030/0-0.4830

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *