கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 1

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் டி.20 தொடருக்கான புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

14வது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் இளம் வீரரான ஷாருக் கானை (47) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 106 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் சாம் கர்ரான், டூவைன் பிராவோ மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 3

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டூபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 15.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 4

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சென்னை அணி; புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது !! 5

இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூர் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், டெல்லி அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

8வது போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்;

RankTeamMatchesWonLostTied/No ResultNet Run RatePoints
1RCB2200/0+0.1754
2CSK2110/0+0.6162
3MI2110/0+0.2252
4DC2110/0+0.1952
5RR2110/0+0.0522
6KKR2110/00.0002
7PBKS2110/0-0.9092
8SRH2020/0-0.4000

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *