நாங்க போன வருசம் மாதிரி இல்ல இப்ப; அதிரடியாக பேசிய சென்னை அணியின் இளம் வீரர் !! 1

இந்த வருட ஐபிஎல் டி.20 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போதிய பலத்துடன் உள்ளதாக சென்னை அணியின் இளம் வீரரான ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாங்க போன வருசம் மாதிரி இல்ல இப்ப; அதிரடியாக பேசிய சென்னை அணியின் இளம் வீரர் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

நாங்க போன வருசம் மாதிரி இல்ல இப்ப; அதிரடியாக பேசிய சென்னை அணியின் இளம் வீரர் !! 3

இந்தநிலையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ஜெகதீசன், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போதிய பலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகதீசன் பேசுகையில், “இந்த வருட தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் போதிய பலத்துடன் உள்ளதாக கருதுகிறேன். இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் அனைவரும் காத்துள்ளோம். எங்கள் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் உள்ள சுரேஷ் ரெய்னா எங்களுடன் இருப்பது எங்களது மிகப்பெரும் பலம். கடந்த தொடரில் விளையாடாத சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் மீண்டும் விளையாட உள்ளது எங்களுக்கு கிடைத்துள்ள கூடுதல் பலம் தான். உத்தப்பாவும் அனுபவம் வாய்ந்த சிறந்த பேட்ஸ்மேன். ஐபிஎல் போன்ற தொடர்களில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது கூடுதல் சிறப்பு தான். அதே போல் ஒரு அணிக்கு ஆல் ரவுண்டர்கள் எவ்வளவு முக்கியம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அப்படி எங்கள் அணியில் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொய்ன் அலி போன்ற சிறந்த ஆல் ரவுண்டர்கள் இருப்பது எங்களது கூடுதல் பலம்” என்றார்.

நாங்க போன வருசம் மாதிரி இல்ல இப்ப; அதிரடியாக பேசிய சென்னை அணியின் இளம் வீரர் !! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *