சென்னை இல்லை… இந்த அணிய சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்; அஸ்வின் ஓபன் டாக் !! 1

கடந்த தொடர்களை போன்றே இந்த வருட ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரவிச்சந்திர அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை இல்லை… இந்த அணிய சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்; அஸ்வின் ஓபன் டாக் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், ஆவலையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

சென்னை இல்லை… இந்த அணிய சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்; அஸ்வின் ஓபன் டாக் !! 3

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பேசியுள்ள சீனியர் வீரர் ரவிச்சந்திர அஸ்வின், கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கூறியுள்ளார்.

இது குறித்து ரவிச்சந்திர அஸ்வின் பேசுகையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் பலம் வாய்ந்ததே. ஆனால் மற்ற அணிகளை விட மும்பை இந்தியன்ஸ் அணி அபாயகரமானது என்பதை ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகமான அனுபவ வீரர்கள் உள்ளனர். கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது அனைத்து அணிகளுக்கும் சற்று கடினமாக தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை இல்லை… இந்த அணிய சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்; அஸ்வின் ஓபன் டாக் !! 4

கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் விலகியது குறித்து பேசிய அஸ்வின் “நிச்சயமாக ஸ்ரேயஸ் ஐயர் எங்கள் அணியின் மிக சிறந்த வீரர். டெல்லி அணிக்காக நான் விளையாட உள்ளது இது இரண்டாவது முறை ஆகும், ஆனால் ஸ்ரேயஸ் ஐயர் நீண்ட காலமாக டெல்லி அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நிச்சயமாக இந்த தொடரில் அவரை மிஸ் செய்வோம், அவரது பேட்டிங்கையும் எங்கள் அணி மிஸ் செய்யும். அணியில் நீண்ட காலமாக விளையாடும் ஒரு அனுபவ வீரர் இருப்பது ஒவ்வொரு அணிக்கும் ஒரு பலம் தான், எங்கள் அணியின் அனுபவ வீரரான ஸ்ரேயஸ் ஐயர் விலகியிருப்பது நிச்சயம் எங்களுக்கு பெரும் பின்னடைவு தான், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் போன்ற அனுபவ வீரர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் ஸ்ரேயஸ் ஐயரின் இடத்தை நிரப்புவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *