போதும் நீங்க ரெஸ்ட் எடுங்க... அடுத்த தொடருக்கு முன் தங்களது கேப்டனை மாற்ற உள்ள மூன்று அணிகள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன.

15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட நெடுந்தொடராக நடத்தப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் மற்ற அனைத்து அணிகளையும் விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட 3 அணிகள் தங்களது அணியின் கேப்டன்களை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படிப்பட்ட மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

யாருமே எதிர்பார்க்காத வகையில் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அணியின் கேப்டனாக அதிரடி வீரர் மயங்க் அகர்வாலை நியமித்தது.

ஆரம்பத்தில் சிறப்பாக அணியை வழிநடத்திய மாயங்க் அகர்வால் போகப்போக தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்துவதிலிருந்து தவறிவிட்டார். மேலும் பேட்டிங்கிலும் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதன் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஷிகர் தவானை கேப்டனாக நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.போதும் நீங்க ரெஸ்ட் எடுங்க... அடுத்த தொடருக்கு முன் தங்களது கேப்டனை மாற்ற உள்ள மூன்று அணிகள் !! 2

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.