ஆஷிஷ் நெஹரா எனக்கு தந்தையைப் போன்றவர் ; குஜராத் அணியின் இளம் வீரர் பேட்டி !! 1

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹரா எனக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளவர் என்று அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடருக்கு புதிய அணியான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.ஆஷிஷ் நெஹரா எனக்கு தந்தையைப் போன்றவர் ; குஜராத் அணியின் இளம் வீரர் பேட்டி !! 2

 

சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் ஆதிக்கமே இந்த தொடரில் அதிகமாக இருந்தது. இதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் உலகின் வெளிச்சம் கிடைத்தது. உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற சில வீரர்கள் இந்த தொடரின் மூலம் இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

 

ஐபிஎல் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டாலும் ஐபிஎல் தொடர் குறித்தான விவாதங்களும், பேச்சுக்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள் இந்த தொடரின் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

 

அந்தவகையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும், குஜராத் அணியின் இளம் வீரரான யஸ் தயாள், தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு குஜராத் அணி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

 

ஆஷிஷ் நெஹரா எனக்கு தந்தையைப் போன்றவர் ; குஜராத் அணியின் இளம் வீரர் பேட்டி !! 3

இது குறித்து யஸ் தயாள் பேசுகையில், “நான் தற்பொழுது சொல்ல விரும்புகிறான் ஆஷிஷ் நெஹ்ரா எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசிர்வாதம், மேலும் அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளவர் போன்றவராவார், அவருடைய வார்த்தை என்னில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது, மற்றவர் பேசுவது போன்று பார்ப்பது போன்று ஆஷிஷ் நெஹரா பேசுவது கிடையாது, மாறாக அவர் நான் சிறுவயதில் இருப்பது போன்று நீ இருக்கிறாய் என்று என்னிடம் கூறினார், மேலும் மன ரீதியாக அவர் அதிகமான நெருக்கடியை கொடுக்க மாட்டார், முஷ்தாக் அலி போட்டியில் எப்படி நான் விளையாடினெனோ அதேபோன்று விளையாடு, ஆனால் கொஞ்சம் இங்கு உன்னை வெளிப்படுத்திக் கொள் என்று தெரிவித்திருந்தார் என்று ஆஷிஷ் நெஹ்ரா குறித்து யாஷ் தயாள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published.