நாங்க எல்லாருமே இதுக்கு தான் ஆசப்பட்டோம்... ஆனால் தோனி ஒத்துக்கவே இல்ல; மனம் திறந்த தீபக் சாஹர் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சஹர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி செய்த தியாகம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்த 14 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

நாங்க எல்லாருமே இதுக்கு தான் ஆசப்பட்டோம்... ஆனால் தோனி ஒத்துக்கவே இல்ல; மனம் திறந்த தீபக் சாஹர் !! 2


கடந்த வருடம் வரை மொத்தம் 8 அணிகளே ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. அதே போல் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துவிட்டதால், அடுத்த தொடர்களுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வைத்து நடத்தப்பட்டது.

மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டனர். விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சஹாரை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணி எப்பொழுதுமே ஒரு வீரரை தேர்வு செய்ய அதிக தொகை பயன்படுத்தாது என்பது அனைவருக்கும் தெரியும்,ஆனால் சென்னை அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த தீபக் சஹர் இவ்வளவு தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

நாங்க எல்லாருமே இதுக்கு தான் ஆசப்பட்டோம்... ஆனால் தோனி ஒத்துக்கவே இல்ல; மனம் திறந்த தீபக் சாஹர் !! 3

மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய சந்தோஷத்தில் இருக்கும் தீபக் சஹர் சென்னை குறித்தான சுவாரசியமான கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் சென்னை அணிக்காக தோனி செய்த தியாகம் குறித்து தீபக் சஹர் பேசியதாவது, “சென்னை அணி நிர்வாகம் முதன்மை வீரராக மகேந்திர சிங் தோனியை தான், தக்கவைக்க வேண்டும் என்று விருப்பம் காட்டியது, ஆனால் தோனி பெருந்தன்மையாக அதை மறுத்து விட்டார். தோனி பணத்தை முதன்மையாகக் கருதவில்லை, ஒரு வீரரின் திறமையை பணத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. திறமையான ஒரு வீரர் 10 லட்சமோ 80 லட்சமோ எந்த தொகையில் தேர்ந்தெடுத்தாலும் சிறப்பாகவே செயல்படுவார்” என்று சஹர் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.