இவர சரியா பயன்படுத்தாம விட்டுட்டாங்க.... சென்னை அணியின் தோல்விகளுக்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

டெவன் கான்வேவை சரியாக பயன்படுத்தாதே சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்து ஜடேஜாவின் தலைமையின் கீழ் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜாவின் கேப்டன்சியில் 8 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி, தோல்வியை விட ஜடேஜா உள்பட சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டனர், அதே போல் கடந்த தொடர்களில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. கேப்டன்சி அழுத்தமே ஜடேஜாவின் சொதப்பல் ஆட்டத்திற்கு காரணம் என பேசப்பட்ட நிலையில், ஜடேஜா கடந்த சில தினங்களுக்கு கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இதனால் சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

இவர சரியா பயன்படுத்தாம விட்டுட்டாங்க.... சென்னை அணியின் தோல்விகளுக்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

தோனி கேப்டன் பதவி ஏற்றப்பிறகு மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, அதில் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, மூன்று போட்டிகளிலும் சென்னை அணி மிக சிறப்பாக செயல்பட்டதற்கு டெவன் கான்வேவே மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ள டெவன் கான்வேவை, சென்னை அணி சரியாக பயன்படுத்திருந்தால் சென்னை அணி பல போட்டிகளில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே பெரும்பாலான ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இவர சரியா பயன்படுத்தாம விட்டுட்டாங்க.... சென்னை அணியின் தோல்விகளுக்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இந்தநிலையில், டெவன் கான்வே இருந்திருந்தால் சென்னை அணி பல போட்டிகளில் தோல்வியடைந்திருக்காது என்ற கருத்தை முன்னாள் வீரரான முகமது கைஃபும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருப்பது சென்னை அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் போடுவதற்காக தோனி களத்திற்குள் வருவதில் இருந்தே சென்னை அணியின் மாற்றம் தெளிவாக தெரிகிறது. தோனியின் கேப்டன்சியை நிச்சயம் சென்னை அணி மிஸ் செய்திருக்கும். அதே போல் ஒரு போட்டியில் சொதப்பியதன் காரணமாக டெவன் கான்வேவை ஆடும் லெவனில் இருந்து நீக்கியிருக்க கூடாது. டெவன் கான்வே சரியாக பயன்படுத்திருந்தால் நிச்சயம் சென்னை அணி இத்தனை போட்டிகளில் தோல்வியடைந்திருக்காது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.