ரோஹித் சர்மா, விராட் கோலியை பற்றி கவலைப்பட தேவையே இல்ல... முன்னாள் வீரர் ஆதரவு !! 1

எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடரில் நிச்சயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

2022 டி 20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலியை பற்றி கவலைப்பட தேவையே இல்ல... முன்னாள் வீரர் ஆதரவு !! 2

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மிகவும் உதவியாக இருக்கிறது.

இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தற்பொழுது அனைவர் மனதிலும் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்த ஐபிஎல் தொடரில் மோசமான பார்மல் அவதிப்பட்டு வரும் சீனியர் வீரர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தான்.

குறிப்பாக இந்திய அணியின் தூண்களாக கருதப்பட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் பங்கு இந்த உலகக் கோப்பை தொடரில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தான்.

மோசமான பார்மால் அவதிப்படும் இந்த இரண்டு பேர் சம்பந்தமான கருத்துக்களையும்,இவர்களால் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட முடியுமா என்பது குறித்தான பல்வேறு விசயங்களையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்துக் வருகின்றனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலியை பற்றி கவலைப்பட தேவையே இல்ல... முன்னாள் வீரர் ஆதரவு !! 3

அந்த வரிசையில் விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னுடைய வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் சாம்பியன்கள் தான், நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் தங்களுடைய பார்மை மீட்டு எடுப்பார்கள் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இவர்கள் தற்போது இருக்கும் நிலைமையிலிருந்து மீண்டு வந்து இதைவிட சிறப்பான வீரர்களாக செயல்படுவார்கள் என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவர் குறித்தும் ஹர்பஜன்சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.