இது தான் நல்ல சான்ஸ்... இப்பவே இவர கழட்டி விட்றுங்க; குஜராத் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று ஆகாஷ் சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.இது தான் நல்ல சான்ஸ்... இப்பவே இவர கழட்டி விட்றுங்க; குஜராத் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

 

அணியும் புதிது அணிக்கு கேப்டனும் புதிது என்றாலும் தன்னுடைய முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாதான் என்று கூறலாம், அந்த அளவிற்கு இவருடைய பங்களிப்பு குஜராத் அணிக்கு மிகவும் சிறப்பாகவே இருந்தது.

என்ன தான் குஜராத் அணி கோப்பையை வெற்றி பெற்றாலும் அந்த அணியிலும் சில தவறுகள் ஏற்பட்டிருந்தது, அந்த தவறை சரியான நேரத்தில் மாற்றியதன் காரணமாக தான் அணி வெற்றி பெற்றதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.இது தான் நல்ல சான்ஸ்... இப்பவே இவர கழட்டி விட்றுங்க; குஜராத் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மட்டும் கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட் எந்த ஒரு பங்களிப்பையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

மேத்யூ வேட் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,“விருத்திமான் சஹாவிற்கு பதில் முதல்பாதியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார், மேலும் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஆனால் இவர் குஜராத்தில் அணிக்காக எந்த ஒரு பங்களிப்பையும் செய்யவில்லை, இவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை எல்லாம் வீணடித்து விட்டார். வாய்ப்பை வீணடித்தால் குஜராத் அணி கட்டாயம் அணியிலிருந்து நீக்க வேண்டும்,குஜராத் அணி அதைத்தான் செய்திருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.இது தான் நல்ல சான்ஸ்... இப்பவே இவர கழட்டி விட்றுங்க; குஜராத் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

 

விருத்திமான் சஹாவிற்கு பதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மேத்யூ வேட்டை களமிறக்கியது, ஆனால் இவர் 10 போட்டிகளில் வெறும் 157 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக இவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு விருத்திமான் சஹாவிற்கு குஜராத் வாய்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.