பாவம் அந்த பையன்... அவர சச்சின் டெண்டுல்கரோடா ஒப்பிடுவதே ரொம்ப தப்பு; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

அர்ஜுன் டெண்டுல்கர் கற்றுக் கொள்வதற்கு இன்னும் அதிக விஷயங்கள் உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்

ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி பிளே ஆப் சற்று கூட தகுதி பெறாமல் முதல் அணியாக போட்டியில் இருந்து வெளியேறியது.பாவம் அந்த பையன்... அவர சச்சின் டெண்டுல்கரோடா ஒப்பிடுவதே ரொம்ப தப்பு; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் கேப்டன்ஷிப் என எதுவுமே சரியில்லை என்று முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சொதப்பிய வீரர்களுக்கு பதில் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் மும்பை அணிக்கு ஆலோசனை கொடுத்து வந்தனர்.

இதன் பிரதிபலிப்பாக மும்பை அணி பிளேயர் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை என்ற நிலை எட்டியவுடன் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது, ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

2022 ஐபிஎல் தொடரில் 30 லட்சம் தொகைக்கு மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலே அணியில் எடுத்துள்ளார்கள் நிச்சயம் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிப்பார்கள் என்று தொடர் துவங்குவதற்கு முன்பே சிலர் விமர்சித்தனர்.

ஆனால் விமர்சித்தவர்களே அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கூறியபோதும் மும்பை அணி வாய்ப்பளிக்கவில்லை.

பாவம் அந்த பையன்... அவர சச்சின் டெண்டுல்கரோடா ஒப்பிடுவதே ரொம்ப தப்பு; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3
மேலும் தொடர் முடிந்தவுடன் மும்பை அணி, ஏன் அர்ஜுனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து ஷேன் பாண்ட் பேசுகையில்,“அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டும், அணியில் இணைந்து கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும் ஆடும் லெவனில் சேர்வதே முக்கியாமனது, அதுவும் மும்பை போன்ற அணிகளில் மிகவும் முக்கியமானது, அவர் இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான வேலைகள் அதிகம் உள்ளது, அனைவரும் அணியில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது, அர்ஜுன் தன்னுடைய பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஷேன் பாண்ட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.