இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் சொத்து; நடராஜனை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜனை முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயிப் அக்தர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் சொத்து; நடராஜனை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 2

மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 52 போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலரே இந்த தொடரில் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் பெற்று வரும் இளம் வீரர்களை, முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் சொத்து; நடராஜனை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர், பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சோயிப் அக்தரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

நடராஜன் குறித்து அக்தர் பேசுகையில், “நடராஜனின் பந்துவீச்சில் தனித்துவம் உள்ளது. என்னை பொறுத்தவரையில் நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்துள்ள பெரிய சொத்து. நடராஜனின் திறமையை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவரது முன்னேற்றத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரரான நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.