படிக்கல், ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பே இல்லை... பெங்களூர் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 1

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள நான்கு வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

படிக்கல், ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பே இல்லை... பெங்களூர் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 2

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது. மூன்று இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு விடப்பட வேண்டும்.

மேலும் புதிதாக இணைந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு வெளியே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அதில் 2 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.

படிக்கல், ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பே இல்லை... பெங்களூர் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 3

தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து கொள்வதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான், அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள நான்கு வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

படிக்கல், ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பே இல்லை... பெங்களூர் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 4

இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “பெங்களூர் அணி நிச்சயமாக விராட் கோலி மற்றும் கிளன் மேக்ஸ்வெல்லை தக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்தபடியாக தேவ்தட் படிக்கல்லா, ஹர்சல் பட்டேலா, முகமது சிராஜா, சாஹலா என்பது தான் கேள்விக்குறி. இதில் பெங்களூர் அணி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் முகமது சிராஜிற்கே முன்னுரிமை கொடுக்கும் என்பது தான் எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *