டெவன் கான்வே இல்லை... சென்னை அணி எடுத்த தரமான வீரர் இவர் தான்; முன்னாள் வீரர் பாராட்டு !! 1

இந்த ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட வீரர்களிலேயே மிகச்சிறந்த வீரர் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீக்சனா தான் என்று வாசிம் ஜாபர் பாராட்டி பேசியுள்ளார்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.



மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 52 போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

டெவன் கான்வே இல்லை... சென்னை அணி எடுத்த தரமான வீரர் இவர் தான்; முன்னாள் வீரர் பாராட்டு !! 2

நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலரே இந்த தொடரில் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் பெற்று வரும் இளம் வீரர்களை, முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.



அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பாராட்டிப் பேசியுள்ளார் .

டெவன் கான்வே இல்லை... சென்னை அணி எடுத்த தரமான வீரர் இவர் தான்; முன்னாள் வீரர் பாராட்டு !! 3

தீக்சனா குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “தீக்சனா இந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார், இவர் இந்த ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட வீரர்களிலேயே மிகச் சிறந்த வீரர், இவர் சென்னை அணிக்காக இந்த தொடரில் பவர் பிளேயில் 5 விக்கெட்டுகளும் டெத் ஓவர்களில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார், தீக்சனா சென்னை அணியில் இடம்பெறாத நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது, மோயின் அலி இந்த வருடம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. எப்பொழுது சென்னை அணி தீக்சனாவை ஆடும் லெவனில் களமிறக்கியதோ அப்பொழுது தான் சென்னை அணியின் பந்துவீச்சு பலமாக அமைத்தது என்று வாசிம் ஜாபர் தீக்சனாவை பாராட்டி பேசியுள்ளார்.

 

 

Leave a comment

Your email address will not be published.