முக்கியமான போட்டியில் மிக மட்டமாக விளையாடிய சென்னை வீரர்கள்; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது சென்னை அணி !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

முக்கியமான போட்டியில் மிக மட்டமாக விளையாடிய சென்னை வீரர்கள்; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது சென்னை அணி !! 2

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனியை (36*) தவிர மற்ற வீரர்கள் அனைவரும், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 97 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முக்கியமான போட்டியில் மிக மட்டமாக விளையாடிய சென்னை வீரர்கள்; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது சென்னை அணி !! 3

இதன்பின் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும், 33 ரன்கள் எடுத்த போது 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், திலக் வர்மா (36) மற்றும் சோகீன் (18) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முக்கியமான போட்டியில் மிக மட்டமாக விளையாடிய சென்னை வீரர்கள்; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது சென்னை அணி !! 4

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து இரண்டாவது அணியாக வெளியேறியுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது சென்னை அணியையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published.