பந்துவீச்சிலும் பெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி; படுதோல்வியடைந்தது பெங்களூர் அணி !! 1

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பந்துவீச்சிலும் பெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி; படுதோல்வியடைந்தது பெங்களூர் அணி !! 2

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 70 ரன்களும், பாரிஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சிலும் பெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி; படுதோல்வியடைந்தது பெங்களூர் அணி !! 3

 

பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் (10) மற்றும் விராட் கோலி (20) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் (35) மற்றும் படித்தர் (26) ஓரளவிற்கு ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பந்துவீச்சிலும் பெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி; படுதோல்வியடைந்தது பெங்களூர் அணி !! 4

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவான் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Leave a comment

Your email address will not be published.