விராட் கோலிக்கு அட்வைஸ் பன்றது எல்லாம் ஓகே.... ஆனா ரோஹித் சர்மாவை பத்தியும் கொஞ்சம் பேசுங்க; மேத்யூ ஹைடன் அதிரடி பேச்சு !! 1

நடப்பு தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு அட்வைஸ் கொடுக்கும் ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள், ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்து பேசாதது ஏன் என முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

விராட் கோலிக்கு அட்வைஸ் பன்றது எல்லாம் ஓகே.... ஆனா ரோஹித் சர்மாவை பத்தியும் கொஞ்சம் பேசுங்க; மேத்யூ ஹைடன் அதிரடி பேச்சு !! 2

நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலரே இந்த தொடரில் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் பெற்று வரும் இளம் வீரர்களை, முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். அதே வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற இந்திய அணியின் சீனியர் முக்கிய வீரர்கள் பலர், இந்த தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.

விராட் கோலிக்கு அட்வைஸ் பன்றது எல்லாம் ஓகே.... ஆனா ரோஹித் சர்மாவை பத்தியும் கொஞ்சம் பேசுங்க; மேத்யூ ஹைடன் அதிரடி பேச்சு !! 3

இதில் குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும், இந்நாள் கேப்டனான ரோஹித் சர்மாவும், ஒவ்வொரும் போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு ரன் எடுக்கவும் திணறி வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவருமே இந்த தொடரில் சொதப்பி வந்தாலும், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் விராட் கோலிக்கு மட்டுமே தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ரோஹித் சர்மா குறித்தோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்தோ யாரும் பெரிதாக வாய் திறப்பது இல்லை.

விராட் கோலிக்கு அட்வைஸ் பன்றது எல்லாம் ஓகே.... ஆனா ரோஹித் சர்மாவை பத்தியும் கொஞ்சம் பேசுங்க; மேத்யூ ஹைடன் அதிரடி பேச்சு !! 4

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ ஹைடன், விராட் கோலிக்கு அட்வைஸ் செய்யும் ரவி சாஸ்திரி போன்றோர், ரோஹித் சர்மா குறித்து பேசாதது ஏன்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விராட் கோலிக்கு அட்வைஸ் பன்றது எல்லாம் ஓகே.... ஆனா ரோஹித் சர்மாவை பத்தியும் கொஞ்சம் பேசுங்க; மேத்யூ ஹைடன் அதிரடி பேச்சு !! 5

விராட் கோலிக்கு சிறிது நாட்கள் ஓய்வு தேவை என்ற ரவி சாஸ்திரியின் கருத்தை மேற்கோள் காட்டி, ஹைடன் பேசுகையில், “ரவி சாஸ்திரி சொல்வது ரோஹித் சர்மாவிற்கும் பொருந்துமா என தெரியவில்லை. இருவருமே கடந்த பல வருடமாக மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக கோலி, கடந்த பல வருடங்களாகவே பிட்டாக இருப்பதில் இருந்து அனைத்து விசயத்தையும் சரியாக செய்து வருகிறார். வெறும் ஒரு வருட ஐபிஎல் தொடரை மட்டும் வைத்து கொண்டு, கோலி போன்ற சிறந்த வீரர்களை விமர்சிப்பது சரியல்ல” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.